" Elevate Your Edits "

Full screen WhatsApp status AlightMotion

KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.

[wp_ad_camp_1]

COMPARED TO PC SOFTWARES

கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.

HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT

black screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.

HOW To USE GREEN SCREEN VIDEO EFFECT

green screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும்.

HOW To USE INTRO TEMPLATE WITHOUT TEXT

இந்த Kinemaster intro template ஐ பயன்படுத்தி உங்களது YouTube Channel க்கான intro video உருவாக்க முடியும். இதில் உங்களது logo மற்றும் text மட்டும் சேர்த்து ஒரு intro வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த template ஐ கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும்.

MULTIPLE LAYERS

KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக layer ல் add செய்து உங்களால் வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். Video Edit செய்ய பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது.

MORE Black screen video effect 500 BLENDING MODE

கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த Blending ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த blending ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும்.

CHROMA KEY

வீடியோவின் background ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் background ஒரே கலராக இருந்தாள் சுலபமாக நீக்க முடியும். உதாரணமாக வீடியோவின் background பச்சை நிறத்தில் இருந்தால் remove செய்வதற்கு எளிதாக இருக்கும்.வீடியோவின் கலர் எது என்று தெரிந்து கொண்டு remove செய்யும்போது key colour அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும்.

VOICE RECORDING

வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது. இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே voice record செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது.

HANDWRITING

இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும்.

[wp_ad_camp_1]

VOICE CHANGER

உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்றவும் இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை robot பேசினால் எப்படி இருக்குமோ அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது.

EQ MODES

ஆடியோவில் விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாக இருக்கும். உதாரணமாக கூறினால் rock, classic இதுபோன்ற ஆடியோ filter இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும்.

PREMIUM COLOUR FILTER

வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள இந்த colour filter ஆப்ஷன் பயன்படுகிறது. இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும்.

EXPORT QUALITY

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் edit செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை output எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ பார்க்க தெளிவாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த format ல் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த quality ல் வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம்.

SPEED CONTROL

உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும்.

VIDEO REVERSE MODE

ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் video reverse option ஆகும்.

CLIP GRAPHICS

இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும்.

ROTATE AND MIRRORING

வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த rotate and mirror option பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.இதை உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

[wp_ad_camp_1]

COLOUR ADJUSTMENT

VOLUME ENVELOPE

இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது.ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும்.

உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது.அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் contrast, level, brightness அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் மற்றும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.

VIGNETTE

இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களின் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும்.இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது.

EXTRACT AUDIO

இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம்.ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோவிற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும்.நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.

TRIM AND SPLIT

வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை cut செய்ய trim and split ஆப்ஷன் பயன்படுகிறது.கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது.அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும்.

PAN AND ZOOM

இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.

PREMIUM TEXT

இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் default ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது.

OVERLAY AND STICKERS

வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தவும் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவுகளையும் ஏற்படுத்த முடியும்.

ANIMATION AND TRANSITION EFFECTS

எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது.தொடக்கம் மற்றும் முடிவில் ஒரு அனிமேஷனை பயன்படுத்த முடியும்.தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும்.

KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ?

இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன்.Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும்.அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும்.அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது.இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது. உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.

[wp_ad_camp_1]

Download

[wp_ad_camp_1]

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping